நடைமுறைக்கு வந்தது 20 ஆவது திருத்தச் சட்டம் !

Thursday, October 29th, 2020

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில்  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையெழுத்திட்டுள்ளதாக நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல  தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன 20ஆவது திருத்தச் சட்டத்தில் கையொப்பமிட்டதை அடுத்து இன்றிலிருந்து அச்சட்டம் நடைமுறைக்கு வருகிறது.

முன்பதாக கடந்த 22ஆம் திகதி 20ஆம் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் நிறைவேற்றப்பட்டது.

அதன் பின்னர் இந்த 20ம் திருத்தச் சட்ட வரைவு, சட்டவாக்கல் பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து சபாநாயகரிடம் இன்றைய தினம் ஒப்படைக்கப்பட்டது.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்துக்கு கையளிக்கப்பட்டிருந்த நிலையில்  சபாநாயகர்  அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனடிப்படையில் 20ஆம் திருத்தச் சட்டம் இன்றையதினம்முதல் அமுலாகின்றது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நாட்டின்  தற்போதைய  நிலைமையின் அடிப்படையில், எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில்  சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களுடனான கலந்துரையாடலொன்று  இடம்பெற்றுவருகின்றது.

நாடாளுமன்ற வளாகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுவருவதாக   நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0000

Related posts: