பலாலி – சென்னை விமான போக்குவரத்து விரைவில் ஆரம்பம்!

Wednesday, October 12th, 2022

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்தின் சென்னைக்கான விமான போக்குவரத்தை இந்த மாத இறுதியில் முன்னெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்துள்ளதாக பலாலி சர்வதேச விமான நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பலாலி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கான விமான போக்குவரத்தினை எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த விமான சேவை தொடர்பில் இந்திய விமான நிறுவனத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு நாட்டின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக பலாலி சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜூன் 18 ஆம் திகதி யாழ். பலாலி விமான நிலையத்திற்கு விஜயம் செய்த சிவில் விமான சேவைகள், கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஜூலை முதலாம் திகதி பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படுமென தெரிவித்திருந்த போதிலும் அன்றைய தினமும் விமானப் போக்குவரத்து முன்னெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான திரிபோஷாவை இந்த வாரத்திற்குள் வழங்குவதற...
நாடு முழுவதும் 1.8 மில்லியன் குடும்பங்களுக்கு நிவாரணம் - 1.5 மில்லியன் அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு...
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு - அடுத்துவரும் 24 மணிநேரத்திற்கு விடுக்கப்பட்டது சிவப்பு எச்சர...