நடைபாதை வியாபார அனுமதி இன்றுடன் நிறைவு – வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவிப்பு!
Tuesday, April 18th, 2023
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட காலம் இன்று நிறைவடைகின்றதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், தொடர்ந்தும் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடுவோரை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அதன் பணிப்பாளர் நாயகம் எஸ்.வீரகோன் தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலத்தை முன்னிட்டு நடைபாதை வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு வர்த்தகர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்பட்டிருந்தது, அத்துடன், அவர்களிடம் இருந்து அதற்காக எவ்வித கட்டணங்களும் அறவிடப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பிரான்ஸ் அரசு அதிர்ச்சி வைத்தியம்!
நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்ப...
இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த எமிரேட்ஸுடன் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து !
|
|
|


