நடேஸ்வரா கல்லூரியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

Thursday, September 29th, 2016

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்தில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டு மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியின் புனரமைப்புப் பணிகள் 3.6 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது.

குறிப்பாக கட்டட புனரமைப்பு மற்றும் மாணவர்களுக்கான மலசல கூடங்கள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்த காங்கேசன்துறையில் ஒரு தொகுதி காணிகளை அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுவித்திருந்தார்.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியும் விடுவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட பாடசாலையில் உள்ள சிறிய வளங்களைக் கொண்டு மீண்டும் தனது சொந்த இடத்தில் குறித்த பாடசாலையின் கற்றல் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

போதிய வளங்கள் முழுமையாக இல்லாத நிலையிலும் இயங்கிவரும் குறித்த பாடசாலைக்காக புனரமைப்பு பணிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

4abe4768e0ab1953c9063414c8a7ade4_1475107205-s

Related posts: