உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து!
Friday, January 19th, 2018
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் 16 ஆம் திகதி முதல் பெப்ரவரி 10 ஆம் திகதிவரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் டீ.எல்.பி.ஆர். அபயரத்ன அறிவித்துள்ளார்.
இந்தத் தேர்தலுக்காக தபால் திணைக்களத்துக்கு பாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் உரிய முறையில் சட்ட ரீதியாக நடத்துவதற்கு தபால் திணைக்களம்பாரிய கடமையை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் தேர்தல் நடத்துதல் வாக்குகளை எண்ணுதல் போன்ற நடவடிக்கைகளுக்காக சேவையாளர்களை நியமிக்கும் கடிதங்களை தாமதமின்றி ஒப்படைத்தல்மற்றும் வாக்காளர் அட்டைகளை வீடு வீடாகச் சென்று ஒப்படைத்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
மருந்து வகைகளின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை - அமைச்சர் ராஜித சேனாரத்ன!
மக்களின் காணி உரித்துரிமையை எவராலும் தடுக்க முடியாது – பிரதமர்!
30,000 பேர் ஓய்வு பெறுவது பொதுச் சேவைகளுக்கு இடையூறாக இருக்காது - உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர...
|
|
|
மின்சாரக் கட்டண சலுகைகள் தொடர்பான பரிந்துரைகள் மின் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பிப...
எந்நேரத்திலும் தயார் நிலையில் இருக்க வேண்டும் - இலங்கையில் பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் உத...
பெறுமதி சேர் வரி அதிப்பு - மின்சார கட்டணம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பாதிப்பு ஏற்படாது - நிதி இரா...


