நடப்பாண்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவு!

Wednesday, March 20th, 2019

கடந்த வருடங்களைவிட இந்த வருடத்தில் இதுவரையான காலத்துடன் ஒப்பிடுகையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன் சமூக வைத்திய நிபுணர் ப்ரஷீலா சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது வரை 10 ஆயிரத்து 800 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கை கடந்த 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், குறைந்த அளவே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோய் பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்க கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Related posts: