நடத்துனர்களின்றி பேருந்து போக்குவரத்தை முன்னெடுக்க யோசனை முன்வைப்பு – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தகவல்!

பேருந்து நடத்துனர் அல்லது சாரதி உதவியாளர்களின்றி பயணிகள் போக்குவரத்திற்காகப் பேருந்துகளைப் பயன்படுத்தக்கூடிய வகையில் மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தைத் திருத்துமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் போக்குவரத்து அமைச்சுக்கு யோசனை முன்வைத்துள்ளது.
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 காரணமாகப் பேருந்து தொழில்துறையின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதோடு பணியாளர்களின் வெற்றிடம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனைக் கருத்திற்கொண்டு குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சீரம் நிறுவனத்திடமிருந்து எதுவித தாமதமுமின்றி குறிப்பிட்ட தினத்தில் தடுப்பூசி கிடைக்கும் - சுகாதார ச...
நாளை தேசிய துக்கதினம் பிரகடனம்!
நாளை நண்பகலுக்கு முன் விண்ணப்பங்களை கையளிக்கவும் - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்ட...
|
|