நகைத்திருட்டுடன் தொடர்புடைய இருவர் கைது!
Friday, January 25th, 2019
யாழில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த நகைத்திருட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இருவர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து ஒருதொகுதி நகைகளும் கைப்பற்றப்பட்டன என்று யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து ஓர் உந்துருளியும் மீட்கப்பட்டது. களவாடப்பட்ட மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என்று சந்தேகிக்கப்படும் சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான பதினைந்து பவுண் நகைகள் மீட்கப்பட்டன. மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.
Related posts:
“ஆத்ம பலம்” தியான நிகழ்ச்சி!
சிறந்த விளைச்சலை தரக்கூடிய பிஜி-250 வகை நெல்லினம்!
பொலிஸாரை மோதித்தள்ளி தப்பிய நபர்கள் - இரு பொலிஸார் படுகாயம்!
|
|
|


