சிறந்த விளைச்சலை தரக்கூடிய பிஜி-250 வகை நெல்லினம்!
Thursday, January 5th, 2017
இரண்டரை மாதத்தில் சிறந்த விளைச்சலை தரக்கூடிய பிஜி-250 வகை நெல்லின விதைகளை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரொஹான் விஜயகோன் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தில் நெற்செய்கையின் போது எற்படக்கூடிய பாதிப்புக்களை குறைக்கும் வகையில் நெற்செய்கை மேம்பாட்டுத் திட்டங்களையும் மாற்றுப் பயிர்ச்செய்கைகளையும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மழை மூலம் நான்கு இலட்சம் ஹெக்டெயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் நெல் தொகை எதிர்வரும் ஜூலை மாதம் மட்டுமே பாவனைக்கு போதுமாக உள்ளது. நெற்செய்கைக்கு மேலதிகமாக மரக்கறி மற்றும் பழ வகைகளை பயிரிடுவது தொடர்பிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய திணைக்கள பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

Related posts:
அடுத்த மாத இறுதிக்குள் கபொத உயர்தர பரீட்சை பெறுபேறுகள்!
பராமரிப்பு பணிகள் காரணமாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைய பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
நாட்டில் தேங்காய்களின் விலை அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம் இதுதான் - மூத்த பேராசிரியர் அருண குமா...
|
|
|


