நகைத்திருட்டுடன் தொடர்புடைய இருவர் கைது!
Friday, January 25th, 2019
யாழில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த நகைத்திருட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இருவர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து ஒருதொகுதி நகைகளும் கைப்பற்றப்பட்டன என்று யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து ஓர் உந்துருளியும் மீட்கப்பட்டது. களவாடப்பட்ட மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என்று சந்தேகிக்கப்படும் சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான பதினைந்து பவுண் நகைகள் மீட்கப்பட்டன. மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.
Related posts:
சேதன திரவ உரக் கொள்கலன்களின் வெடிப்பு தொடர்பில் ஆராய்கிறது விவசாய அமைச்சு!
இலங்கை - அமெரிக்கா இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் - 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெ...
விவசாய தேவைகளுக்காக மின்சாரத்தை பயன்படுத்தும் வடக்கு விவசாயிகளுக்கு நிவாரணம் - அமைச்சரவையில் யோசனை ...
|
|
|


