நகர்புறப் பாடசாலைகளை நாடாது கிராமப் பாடசாலையை வளருங்கள் – வலிகாமம் வலயக் கல்வி முகாமைத்துவ பிரதிக் கல்விப் பணிப்பாளர்!

Wednesday, February 13th, 2019

கிராம நகர வேறுபாட்டின் அடிப்படையில் சங்கானையைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் யாழ்ப்பாண நகர பாடசாலைகளை நோக்கி நாடுவது எமக்கு வேதனையளிக்கின்றது.

எதிர்காலத்திலாவது எமது மனங்களில் மாற்றம் வரவேண்டும். குறிப்பாக இங்குள்ள பெற்றோர்கள் பொது அமைப்பின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள் விழிப்புணர்வு செய்வது எமது கிராமத்திலுள்ள பாடசாலைகளின் தரம் மிக்க ஆசிரிய வளத்தைப் பயன்படுத்த முன்வர வேண்டும் என வலிகாமம் வலயக் கல்வி முகாமைத்துவ பிரதிக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சங்கானை சிவப்பிரகாச வித்தியாசாலை கடந்த காலங்களில் பல சாதனையாளர்களை கல்வியிலும் விளையாட்டிலும் உருவாக்கிய வரலாறு உண்டு. அதேபோன்று இன்றும் வீறுநடை போட்டு வருவது எமக்கு மட்டுமன்றி வடபுலத்துக்கே மகிழ்ச்சி அளிக்கும் விடயமாகும்.

இங்குள்ள ஆசிரியர்கள், மாணவர்களின் தரத்தை முன்கொண்டு செல்வதற்காக தம்மை அர்ப்பணித்து செயலாற்றுகின்றனர்.

இதனால் இப்பாடசாலை வடக்கில் தனித்துவமான பாடசாலையாக எம்மால் உணரப்படுகின்றது.

புலம்பெயர் நாடுகளில் இருந்து மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டு செயற்பாடுகளுக்கு ஊக்கமளித்து வருகின்றனர்.

Related posts: