தோழர் மகேஸ்வரனின் தாயார் செங்கமலம் தம்பிப்பிள்ளை காலமானார்!
Friday, September 2nd, 2016
அமரர் காலஞ்சென்ற திருமதி செங்கமலம் தம்பிப்பிள்ளையின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தமது அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் இலண்டன் Raynes Park ஐ வதிவிடமாகவும் கொண்ட அமரர் செங்கமலம் தம்பிப்பிள்ளை கடந்த 28.08.2016 அன்று காலமானார்.
அன்னார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் நெருங்கிய நண்பரான தம்பிப்பிள்ளை மகேஸ்வரனின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரது இறுதிச்சடங்கு எதிர்வரும் 07.09.2016 அன்று இலண்டனில் நடைபெறும்.

Related posts:
மீன் உற்பத்தி தொடர்பில் சீன முதலீட்டாளர்கள் ஆர்வம்!
அவசர கால சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிக்கும்!
சவால்களுக்கு மத்தியில் பாதுகாப்பான வளர்ச்சியடைந்த நாடொன்றை உருவாக்குவதற்கே நாம் பாடுபடுகின்றோம் - பி...
|
|
|


