“தோழர் தேவா வைரவிழா வெற்றிக்கிண்ணம்” : வாகை சூடியது கோண்டாவில் கிங்ஸ்ரார்!

உடுவில் குபேரகா கலைமன்றத்தால் நடத்தப்பட்ட தோழர் தேவா வைரவிழா வெற்றிக்கிண்ணத்தை கொண்டாவில் கிங்ஸ்ரார் விளையாட்டுக் கழகம் தனதாக்கிக்கொண்டது.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் 60 ஆவது அகவை பூர்த்தியை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள சிறந்த அணிகளின் பங்கேற்புடன் குறித்த போட்டித்தொடர் இன்றையதினம்(26) உடுவில் உதயசூரியன் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
இன்றுமாலை(26) நடைபெற்ற இறுதிப் போட்டியில் கோண்டாவில் கிங்ஸ்ரார் விளையாட்டுக்கழக அணி உடுவில் அம்பாள் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து போட்டியிட்டு வெற்றியீட்டியது.
இதன்மூலம் தோழர் தேவா வைரவிழா வெற்றிக் கிண்ணத்தை கோண்டாவில் கிங்ஸ்ரார் விளையாட்டுக் கழகம் தனதாக்கிக்கொண்டது.
குறித்த போட்டித்தொடரின் இறுதி போட்டியில் வெற்றியீட்டிய அணிக்கான கிண்ணத்தை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் உடுவில் பிரதேச நிர்வாக செயலாளர் வலன்ரயன் ஆகியோர் வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|