2025 ஆம் ஆண்டுக்குள் காணாமல் போனோர்கள் தொடர்பான முறைப்பாடுகளை நிறைவுசெய்ய எதிர்பார்ப்பு – நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, January 10th, 2024

காணாமல் போனோர்கள் தொடர்பான முறைப்பாடுகளை 2025 ஆம் ஆண்டுக்குள் நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இடமபெற்ற விவாதத்தின் போது எதிர்க்கட்சி நாடளுமன்ற உறுப்பினரான வேலுகுமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்படி காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் கடந்த காலங்களில் செயற்பட்டு வந்திருக்கிறது. 2022 ஆம் ஆண்டு மீண்டும் அதனை நாங்கள் அதனை செயற்படுத்திய போது அதற்கு 14 ஆயிரத்தி 998 முறைப்பாடுகள் கிடைத்தன.

அதில் 62 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணை நடவடிக்கை நிறைவடைந்திருக்கிறது.அத்துடன் கடந்த 18 மாத காலப்பகுதியில் அந்த அலுவலகத்துக்கு புதிய உறுப்பினர்கள் நியமித்து விசாரணை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டோம்.

அதன் பிரகாரம் 5 ஆயிரத்து 200 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கைகளை நாங்கள் முடித்திருக்கிறோம் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 25 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி!
மாணவர்களிடையே சடுதியாக அதிகரித்து வருகின்றது ஐஸ் போதைப்பொருள் பாவளை -தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பா...
அடுத்த இரண்டு மாதங்களில் சுற்றாடல் சட்டம் புதுப்பிக்கப்பட்டு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் - துற...