தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளேன் – பிரதமர் தெரிவிப்பு!

Tuesday, September 29th, 2020

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை வழங்குவதற்கான அறிவிப்பை பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் –  தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது நானே பிரதமர், எனவே பேச்சுவார்த்தை ஊடாக அதற்கான அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

அதேநேரம் 20 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக பிரதமரின் அதிகாரம் குறையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது 13 ஆவது திருத்தச்சட்டம் குறித்து இந்தியப் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடிய விடயம் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வினவப்பட்டபோது, சில விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தியதாக தெரிவித்துள்ளார்..

எனினும் தாம் மோடியுடன் இது குறித்து பேசிய விடயங்கள் நினைவில் இல்லை எனவும் நகைச்சுவையாக பிரதமர் தெரிவித்தள்ளளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: