தொழிற்பயிற்சி அதிகார சபையினால் இலவச சாரதி பயிற்சி!
Tuesday, June 20th, 2017
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை கொக்கலயில் நேற்று ஆரம்பித்துள்ள பயிற்சி மத்திய நிலையதில் இலவச சாரதி பயிற்சி வழங்கப்பட்வுள்ளது.நேற்றைய தினம் மாத்திரம் இதற்காக 350ற்கும் மேற்பட்டோர் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி, மென்ரக வாகனம், கனரக வாகனம் ஆகிய பிரிவுகளுக்குரிய வாகன அனுமதிப்பத்திரங்களை இலவசமாக பெற்றுக் கொடுக்க இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை நடவடிக்கை ஆமற்கொண்டுள்ளது.
அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொடுப்பதற்கு மேலதிகமாக வீதி சட்டங்கள் தொடர்பான தொழில்நுட்ப அறிவும் பெற்றுக்கொடுக்கப்படும். இதற்கான பயிற்சி மத்திய நிலையம் நேற்று கொக்கலயில் திறந்து வைக்கப்பட்டது.
வாகன அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்கான தகுதியைப் பெற்றுள்ள எவரும் இங்கு பயிற்சியைப் பெற்றுக் கொள்ளலாம். தொழில்வாய்ப்பை எதிர்பார்க்கும் ,ளைஞர் யுவதிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.
Related posts:
|
|
|


