தொற்றாளர் எண்ணிக்கையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு மக்கள் உதவ வேண்டும் – – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கடும் எச்சரிக்கை!

Saturday, June 26th, 2021

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதையடுத்து எதிர்வரும் வாரங்களில் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேநேரம் ஏதாவது ஒரு முறையில் தினசரி தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்தால் மீண்டும் பயணத்தடையை அமுல்படுத்த நேரிடுமென இராணுவ தளபதி எச்சரித்துள்ளார்.

இதே முறையில் தொற்றாளர் எண்ணிக்கையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு மக்கள் உதவ வேண்டும்.

தொற்றாளர் அதிகரித்தால் பயணத்தடை அல்லது முடக்க நிலையை அமுல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றல் மற்றும் சுகாதார வழிமுறைகள் என்பவற்றை பின்பற்றி செயற்படுமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ள இராணுவத் தளபதி பயணத்தடை நீக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை தொடரும். மக்களின் நலனை கருத்திற் கொண்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது. தினசரி 2,000 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நிலையிலேயே பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: