தொடர்ச்சியான மழை வீழ்ச்சி – பெரும்போக விவசாயிகள் பெருமகிழ்ச்சி!

Sunday, October 15th, 2023

பெரும்போக நெல் விதைப்பு காலமானது ஆரம்பித்த நிலையில் மழை பெய்யாமையினால் விவசாயிகள் மிகுந்த கவலையில் காணப்பட்டனர்.

இதனால் விதைப்புகள் பின்தள்ளப்படுமா, விளைச்சல் கிடைக்குமா என்ற அச்சத்தில் விவசாயிகள் காணப்பட்டனர்.

இந்நிலையில் நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் விதைப்பிற்கு ஏற்ற வகையில் மழை வீழ்ச்சி கிடைத்துள்ளது.

அந்தவகையில் தமது விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் செயற்பாடுகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: