தொடர்ச்சியான மழைவீழ்ச்சி – கிளிநொச்சி மாவட்டத்தில் 198 குடும்பங்கள் பாதிப்பு – மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தகவல்!

Monday, November 29th, 2021

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியான மழைவீழ்ச்சியின் காரணமாக 198 குடும்பங்கள் பாதிப்பினை எதிர் கொண்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 25ஆம் திகதிமுதல் தொடரும் அதிகரித்த மழைவீழ்ச்சியின் காரணமாக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 185 குடும்பங்களை சேர்ந்த 649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 179 குடும்பங்களை சேர்ந்த 631 பேர் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். மேலும் 392 ஏக்கர் வயல்நிலங்களும் 13 ஏக்கர் தோட்ட காணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 5குடும்பங்களை சேர்ந்த 15 பேர் பாதிப்பினை எதிர்கொண்டுள்ள நிலைமையில் 807 ஏக்கர் வயல்நிலங்கள் அழிவினை சந்தித்துள்ளன.

இதேபோன்று கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 326 ஏக்கர் வயல் நிலங்களும் 9 ஏக்கர் தோட்டக்காணிகளும் அழிவினை சந்தித்துள்ளன.

மேலும் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் 8 குடும்பங்களை சேர்ந்த 19 பேர் பாதிப்பினை எதிர்கொண்டுள்ள நிலைமையில் 1300 ஏக்கர் வயல்நிலங்கள் அழிவடைந்துள்ளதோடு மின்னல் தாக்கத்தினால் இலத்திரனியல் உபகரணங்களும் சேதமடைந்துள்ளன.

அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 198 குடும்பங்களை சேர்ந்த 683 பேர் அனர்த்தத்திற்குள்ளாகியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: