தொடரும் வெப்பநிலை அதிகரிப்பு – நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் பொது மக்களுக்கு அறிவுறுத்து!
Tuesday, March 5th, 2024
நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
நிலவும் வரட்சி காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள நீர் தட்டுப்பாடு காரணமாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் அதிக வெப்பம் மற்றும் வரட்சியான காலநிலை காரணமாக நீர் நுகர்வு பெருமளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள குடிநீரை செடிகள் மற்றும் தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்கு வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நிதி நிறுவனங்களை இலக்கு வைத்து ஆள்மாறாட்ட மோசடிக்கு முயற்சி- மத்திய வங்கி எச்சரிக்கை!
அமைதியான போராட்டங்கள் என்ற பெயரில் உயிருக்கு ஆபத்து விளைவிக்க குழுக்கள் முயற்சி - நாடாளுமன்ற உறுப்ப...
யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிவந்த மூன்று உணவகங்கள் மற்றும் வெதுப்பகம் -நீதிமன்ற உத்தரவில் சீல்...
|
|
|


