தொடரும் வரட்சி பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் – வானிலை நிபுணர்கள் சுட்டிக்காட்டு!
Monday, July 10th, 2023
வரட்சி காரணமாக பெரும்போகம் வீழ்ச்சியடையும் சாத்தியம் உள்ளதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் நாட்டின் பொருளாதாரத்தில் மீண்டும் ஒரு தாக்கம் ஏற்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இலங்கை விவசாயிகளுக்கு 2023 ஆம் ஆண்டு கடினமான ஆண்டாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு வெப்பமான ஆண்டாக உலக விஞ்ஞானிகள் கணித்துள்ள நிலையில், எல் நினோ விளைவு காரணமாக இலங்கையின் பெரும்போக பயிர்ச்செய்கைப் பருவம் வரட்சியினால் மோசமாகப் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழை பலவீனமடையும் நிலை எதிர்வரும் நவம்பர் மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மாகாணசபை தேர்தல்: சட்டமூலத்தில் கையொப்பமிட்டார் சபாநாயகர் !
இலங்கையை மீட்பதற்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதற்கு நாம் தயாராகவே உள்ளோம் - சீனத் தூதுவர் தெரிவிப்பு...
எதிர்க்கட்சித் தலைவரின் உரைக்கு இடையூறு - நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதம கொற...
|
|
|


