இரணைதீவு மக்களின் மீள்குடியேற்றமானது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது மக்கள் நலன் சார் பணிகளுக்கு கிடைத்த வெற்றியாகும் – தோழர் தவநாதன்!

Thursday, May 17th, 2018

இரணைதீவு மக்களின் மீள்குடியேற்றத்துக்கான அனுமதி கிடைத்தமையானது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது மக்கள் நலன் சார் பணிகளுக்கு கிடைத்த பெரு வெற்றியாகும்  என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் வடக்குமாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் தெரிவித்துள்ளார்.

கரைச்சி பிரதேச முரசுமோட்டை வட்டாரத’தை உள்ளடக்கிய கட்சியின் செயற்பாட்டாளர்களுடனான விசேட சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கடும் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்திலும்கூட எமது மக்களின் வாழ்வாதார பொருளாதார மேம்பாடுகள் பாதிப்படையாதவண்ணம் அவர்களுக்கான தேவைகளை பெற்றுக்கொடுத்து அவர்களை பாதுகாத்தவர் எமதுகட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா. அத்தகைய தூரநோக்கடைய அவரது பெரும் பணிகளால்தான் இன்றும் எமது மக்கள் ஓரளவேனும் தலைநிமிர்ந்து வாழமுடிகின்றது.

அத்துடன் கடந்த காலத்தில் யாழ் மாவட்டத்திலுள்ள அதிகமான இளைஞர் யுவதிகளுக்கு அதிகளவில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்ததுடன் மக்கள் நலன் சார்ந்த விடயங்கள் பலவற்றையும் பெற்றுக்கொடுத்ததுடன் பிரதேசங்களின் அபிவிருத்திகளையும் ஏன் எமது கிளிநெச்சி மாவட்டத்தின் அபிவிருத்தியையும் பெற்றுத்தந்தவர் செயல் வீரராகவும் அவர் மக்ளால் பார்க்கப்டுகின்றார்.

அந்தவகையில் தமிழ் மக்களுக்காக தொடர்ச்சியாக நாடாளுமன்றில் குரல் எழுப்பி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்வதில் முனைப்பு காட்டி வரும் அவர் இரணைதீவு மக்களின் மீள்குடியேற்றத்திற்கான அனுமதியை கூட, வேறு எந்த கட்சியாலும் முடியாத காரியத்தை செய்துகாட்டியிருந்தார் எமது கட்சியின் செயலாளர் நாயகம் அவர்கள். இந்த வெற்றியானது அவர் தென்னிலங்கையுடன் கொண்டுள்ள நல்லிணக்கத்தின் வெற்றியாகவும் மக்கள் நலன்களுக்க கிடைத்த வெற்றியாகவுமே அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயகக்க் கட்சியின் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஆ.சிவநேசன் –

பொதுவான வேலைத்திட்டங்களில் பக்கச்சார்பாக செயற்படாது பொது நோக்குடன் சிந்தித்து செயற்படுவதே சிறந்தது.

கிளிநொச்சி டிப்போ வீதியை அகலமாக்கும் நடவடிக்கை பொதுநலன் சார்ந்ததாக இருக்கவேண்டும் அந்தவகையில் கிளிநொச்சி டிப்போ வீதி அகலமாக்குவது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பில் பக்கச்சார்பாக முடிவுகள் எடுக்கும் நிலைமைகளை விடுத்து மக்களுக்கு சாதகமான பொதுவான முடிவுகளை எடுத்து டிப்போ வீதியின் நெரிசலை குறைக்க வேண்டும் எனவும் சிவநேசன் அவர்கள் இதன்போது மேலும் தெரிவித்தார்.

Related posts: