2027 இல் கண்ணிவெடிகள் இல்லாத நாடாக இலங்கை மாறும் – அரசாங்கம் நம்பிக்கை!

Sunday, April 2nd, 2023

கண்ணிவெடி அகற்றும் இலங்கையின் இறுதி மூலோபாய ஒழுங்கமைப்பை வெளிப்படுத்திள்ளது. அதன்படி, 2027 ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனைக்கு அமைய கண்ணிவெடிகளை அகற்றும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதன்படி, இலங்கையில் கண்ணிவெடி அகற்றுவதற்கான இறுதி மூலோபாய ஒழுங்கமைப்புத் திட்டத்தை, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தா தலைமையில் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த வேலைத்திட்டத்திற்கு கலந்து கொண்ட தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடம் இந்நாட்டில் கண்ணிவெடிகளை அகற்றுவது தொடர்பான திட்டம் அமைச்சின் செயலாளரால் முன்வைக்கப்பட்டது.

ஜெனிவா சர்வதேச மனிதநேய கற்றலுக்கான கண்ணிவெடி அகற்றும் நிலையத்தின் ஆதரவுடன் தேசிய கண்ணிவெடி அகற்றல் செயற்பாட்டுத்திட்ட நிலையத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், நாட்டை கண்ணிவெடிகளில் இருந்து விடுவிக்க தேசிய மற்றும் சர்வதேச பங்காளரர்களுடன் நெருக்கமாக பணியாற்ற இருப்பதாக அரசாங்கம் எதிர்பார்த்தள்ளது.

2002 ஆம் ஆண்டு முதல், கண்ணிவெடி அகற்றும் வேலைத்திட்டம் நாட்டில் இயங்கி வருகின்றதுடன், 2010 ஆம் ஆண்டு டுதேசிய கண்ணிவெடி அகற்றல் செயற்பாட்டுத்திட்ட நிலையம்டு ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் பல்வேறு அமைச்சுக்களின் கீழ் இயங்கிய இந்த நிலையம் தற்போது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மீள்குடியேற்றப் பிரிவின் கீழ் செயற்படுகின்றது. இது கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களை ஒருங்கிணைத்து, வழிநடத்துவதோடு கண்காணிக்கிறது.

இலங்கை இராணுவம் நாட்டில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு நேரடி பங்களிப்பை வழங்குவதோடு அது இலங்கை இராணுவத்தின் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் அலகுகள் மூலம் முன்னெடுக்கப்படுகின்றது.

அதுமட்டுமின்றி இரண்டு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் இரண்டு உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

நாட்டில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் பிரிவுக்கு அரசாங்கம் நிதி உதவி வழங்குகிறது. மற்ற 4 அரசு சாரா நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் 17.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்த திட்டத்திற்கு ஆதரவை வழங்கும் சர்வதேச அமைப்புகளிடமிருந்து வழங்கப்படுகிறது.

இதுவரை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 204 சதுர கிலோமீற்றருக்கும் அதிகமான நிலப்பரப்பில் இருந்து ஆளணிக்கு எதிரான கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பொதுமக்களுக்காக விடுவிக்கப்பட்டுள்ளன. ‘தேசிய கண்ணிவெடி அகற்றல் செயற்பாட்டுத்திட்ட நிலையத்தின்படி’, கிட்டத்தட்ட 15 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: