தொடரும் வரட்சியால் 9 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!

Wednesday, May 3rd, 2017

நாட்டில் நிலவிவரும் கடும் வரட்சிகாரணமாகநாடளாவியரீதியில் 09 லட்சத்து 58 ஆயிரத்து 434 பேர் பாதிக்கப்படுள்ளதாகவும, இதில் வடக்குமாகாணத்தில் மட்டும் 04 லட்சத்து 05 ஆயிரத்து 523 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

கடந்தஆண்டின் இறுதியில் பருவமழைவழமையைவிடகுறைவாகப் பெய்தகாரணத்தினால் ஆறுகள்,குளங்கள்,கிணறுகள,ஏரிகள்; உள்ளிட்டநீர் நிலைகளில் தேங்கியுள்ளநீர் தற்போதையவரட்சிகாரணமாகவெகுவாகவற்றிவருகின்றது.

இவ்வரட்சியினால் வடக்குமாகாணத்தில் ஒருலட்சத்து 32 ஆயிரத்து 41 குடும்பங்களைச் சேர்ந்த 04 லட்சத்து 05 ஆயிரத்து523 பேர் பாதிக்கப்பட்டள்ளதாகவும், நாடளாவிய ரீதியிலான புள்ளிவிபரங்களின் அடிப்படையில் வடமாகாணமேஅதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அடுத்தபடியாகமேல்மாகாணத்தில் அதிகளவானவெப்பம் காணப்படுகின்றநிலையில் இங்கு 59 அயிரத்து 766 குடும்பங்களைச் சேர்ந்த 02 லட்சத்து 51 அயிரத்து 321 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வரட்சியால் பாதிக்கப்பட்ட மூன்றாவதாகமாகாணமாகவடமேல் மாகாணம் காணப்படுகின்றது. இங்கு 36அயிரத்து 99குடும்பங்களைச் சேர்ந்த 01லட்சத்து27அயிரத்து641 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

வடமத்தியமாகாணத்தில் அடுத்தபடியாகவரட்சிநிலைகாணப்படுவதாகவும், இம்மாகாணத்தில் அனுராதபுரம் மாவட்டத்திலேயேஅதிகளவானமக்கள் பாதிக்கப்பட்;டுள்ளனர்.

தொடரும் கடும்வெப்பம் மற்றும் வரட்சியான காலநிலை காரணமாக கால்நடைகளுக்கான குடிநீரைப் பெற்றுக் கொள்வதிலும், விவசாயச் செய்கையை முன்னெடுப்பதிலும் கால்நடை வளர்ப்போரும், விவசாயிகளும் பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய பேராபத்தும் உள்ளது.

இந்நிலையில் இன்றையவரட்சியானசூழ்நிலையைக் கருத்தில் கொண்டுபொதுமக்கள் குடிநீர்ப் பயன்பாட்டை சிக்கனமாக பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் சுட்டிக்காட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


யாழ். குடாநாட்டை அசுர வேகத்தில் அச்சுறுத்தும் டெங்கு : வைத்தியர்கள் அசமந்தம் என மக்கள் குற்றச்சாட்ட...
மின்சார கட்டணத்தின் ஒரு பகுதியை அரசாங்கம் பொறுப்பேற்க நடவடிக்கை - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு...
ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு : ஏனையவர்களையும் விரைவில் ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை – ஜனாதிபதி தெரிவிப...