தொடரும் மழை: பெரும்போக நெற்செய்கையாளர்கள் பாதிப்பு!
Sunday, January 19th, 2020
பெரும்போகத்திற்கான அறுவடை இடம்பெற்றுவரும் நிலையில், யாழ். மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருவதனால் விவசாயிகள் மீண்டும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
பெரும்போக செய்கைக்கான நெல் விதைப்பு இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் யாழ். மாவட்டத்தில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகியிருந்த நிலையில் பெரும்பாலான வயல் நிலங்கள் இதனால் அழிவடைந்தன.
தற்போது நெல் அறுவடை இடம்பெறுகின்ற நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அங்கு மழை பெய்து வருகின்றது.இதனால் அறுவடை செய்த நெல் மழையில் நனைந்துள்ளதுடன் , அறுவடை செய்யப்படாத விளை நிலங்களிலும் நீர் நிரம்பியுள்ளது.
இந்நிலையில் நெல்லை உலர வைப்பதற்கான வசதிகள் இல்லாமையினால் விவசாயிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்
Related posts:
கட்டுப்பாட்டு விலையில் பொருள்களை விற்காத 7 வர்த்தகர்கள் சிக்கினர்!
நாடாளுமன்றம் தவிர்ந்த வேறு யாருடைய பரிந்துரையையும் ஏற்கப் போவதில்லை - கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ஜன...
இன்று நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு!
|
|
|


