கட்டுப்பாட்டு விலையில் பொருள்களை விற்காத 7 வர்த்தகர்கள் சிக்கினர்!

Friday, February 3rd, 2017

கடந்த வாரம் நடைமுறைக்கு வந்த புதியக் கட்டுப்பாட்டு விலைக்கு மேலதிகமான விலையில் பொருட்களை விற்ற 7 வர்த்தகர்கள் பாவனையாளர் அதிகாரசபையின் திடீர் சோதனை நடவடிக்கையின் போது சிக்கியுள்ளனர் என இணைப்பதிகாரி வசந்தசேரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அரசு உணவுப் பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலைகளை நிர்ணயித்துள்ளது. 1கிலோ சீனியிலின் விலை 93,ரூபா, ஒரு கிலோ பயற்றின் விலை205ரூபா, ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை 115ரூபா எனவும் நிர்ணயிக்கப்பட்டது. துபாயில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நெத்தலி 405ரூபாவாகவும், தாய்லந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நெத்தலி 490ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

இதில் சீனி, பருப்பு, பயறு என்பனவற்றை எந்தக் காரணம் கொண்டும் கட்டுப்பாட்டு விலைக்கு மேலதிகமாக விற்பனை செய்யலாகாது. கடந்த 27ஆம் திகதியில் இருந்து இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த நடைமுறையைப் பின்பற்றுமாறு வணிக் கழகத்திற்கு தெரியப்படுத்தியதுடன், சகல வர்த்தக நிலையங்களுக்கு ஊடகங்கள் வாயிலாக அறிவித்தல் விடப்பட்டது.

யாழ்.நகர்ப் பகுதி மற்றும் திருநெல்வேலி போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் நடத்திய கண்காணிப்பு நடவடிக்கையின்போது 7 வர்த்தக நிலையங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பாவனையாளர் அதிகார சபையால் யாழ்.மாவட்டம் முழுவதுமான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

எனவே அனைத்து வியாபார நிலையங்களும் குறித்த பொருட்களை கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்ய வேண்டும். இல்லையேல் அவர்களுக்கு எதிராக் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் கட்டுப்பாட்டு விலைக்கு மேலதிகமான விலையில் பொருட்களை விற்பனை செய்தால், அந்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக 021-3219000, 021-7755455 என்ற தொலைபேசி இலக்கங்களுகளுடன் தொடர்பு கொண்டு முறையிடலாம் என்றார்.

Commodities-720x480

Related posts:


முகக் கவசம் இன்றி பயணிப்பவர்களுக்கு அனுமதி கிடையாது - தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் அறிவிப்பு!
அடுத்த நான்கு வருடங்களில் 47 இலட்சம் குடும்பத்தினருக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுப்பதே அரசாங்க...
இந்தியாவினால் வழங்கப்படும் நிதியுதவி தொடர்பிலான ஒப்பந்தங்களை நிறைவுசெய்வதற்கு நிதியமைச்சர் பஷில் மீண...