தொடருந்து ஆசனங்களை முன்கூட்டியே ஒதுக்கிக்கொள்வதற்கான கால எல்லை 30 நாட்களாக நீடிப்பு – தொடருந்து திணைக்களம் தெரிவிப்பு!

தொடருந்து ஆசனங்களை, முன்கூட்டியே ஒதுக்கிக்கொள்வதற்கான கால எல்லை நீடிக்கப்படவுள்ளது.
தொடருந்து ஆசனங்களை ஒதுக்கிக்கொள்வதற்கான அதியுச்ச காலம், 14 நாட்களாக உள்ளது. அந்த கால எல்லை, 30 நாட்களாக நீடிக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் கோரிக்கைக்கு அமையவும், உயர்தர சேவையை வழங்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 13ஆம் திகதி முதல், தொடருந்து ஆசனங்களை முன்பதிவு செய்வதற்கான அதியுச்ச கால எல்லை 30 நாட்களாக நீடிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் பொதுமக்களின் கோரிக்கைக்கு அமையவும், உயர்தர சேவையை வழங்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 13 ஆம் திகதிமுதல், தொடருந்து ஆசனங்களை முன்பதிவு செய்வதற்கான அதியுச்ச கால எல்லை 30 நாட்களாக நீடிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|