தைப்பொங்கலுக்கு முதல்நாள் தனியார் கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு முழுநேர வகுப்பு!
Thursday, January 17th, 2019
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு தைப்பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் வடக்கு மாகாண ஆளுநரால் விடுமுறை வழங்கப்பட்ட போதிலும் தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புக்கள் இடம்பெற்றதாகப் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் வீட்டில் நின்று தைப்பொங்கலுக்கான ஆயத்தங்களை மேற்கொள்ளும் பொருட்டும் குடும்பத்தாருடன் மகிழ்ந்திருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் தான் இந்த விடுமுறை அறிவிப்பு ஆளுநரால் வழங்கப்பட்டிருந்தது.
இருப்பினும் தனியார் கல்வி நிலையங்கள் முழு நேர வகுப்புக்களை நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடத்தி ஆளுநரால் வழங்கப்பட்ட விடுமுறையை அர்த்தமற்றதாக்கியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
Related posts:
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பணிப்பாளர் பதவி துறந்தார்?
எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட இழப்பிற்கான நட்டஈட்டை பெற சர்வதேச சட்ட நிறுவனத்தின் ஒத்துழைப்பை ப...
வாக்களிப்பு நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியை ஏற்படுத்தித் தாருங்கள் - தேர்தல்கள் ஆணைக்குழு...
|
|
|


