சபையின் செயற்பாடுகள் யாவும் வினைத்திறன் மிக்கதாக அமையவேண்டும் – ஈ.டி.பிடி.யின் மாநகர சபை உறுப்பினர் இரா.செல்வவடிவேல்!

Friday, September 28th, 2018

தேவையற்ற விவாதங்களை விடுத்து நிகழ்சி நிரலுக்கேற்ப சபையின் கூட்டத்தை நெறிப்படுத்தினால் யாழ் மாநகரின் செயற்பாடுகள் ஆக்கபூர்வமானதாக அமைவதோடு மாநகரின் தேவைப்பாடுகள் தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து சிறந்த தீர்வுகளையும் எட்டமுடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் இரா செல்வவடிவேல் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றையதினம் யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு முதல்வர் தலைமையில் சபையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.  இதன்போதே இரா செல்வவடிவேல் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

யாழ் மாநகரின் எல்லைக்குள் எத்தனையோ பல வேலைத்திட்டங்கள் காத்திருக்கின்றன. அவற்றை ஆராய்ந்து தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுப்பதோடு சபை அமர்வில் வழங்கப்படுகின்ற நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக ஒவ்வொருவரும் தமது பிரச்சினைகளை முன்வைத்து விவாதங்களை மேற்கொண்டால் அது யாழ் மாநகரின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமானதாக அமையும்.

ஆனால் இங்கு நடப்பதோ மாறாக உள்ளது. தேவையற்ற விவாதங்களும் முரண்பாடுகளுமே இங்கு காணப்படுகின்றது.

இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்தி சபையின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப விவாதங்கள் நடைபெற்று ஆரோக்கியமான அமர்வாக சபை அமர்வுகள் நடைபெற சபை முதல்வர் கவனத்தில் எடுக்கவேண்டும் என்றார்.

Related posts: