தேர்தல் பிரசார காலங்களில் கட்டவுட், பதாகைகளை அகற்ற 1,500 பணியாளர்கள் நியமனம் – தேர்தல் ஆணைக்குழு!
Monday, August 19th, 2024
தேர்தல் பிரசார காலங்களின் போது பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை விளம்பரப்படுத்த பயன்படுத்தும் கட்டவுட்கள், போஸ்டர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அலங்காரங்களை அகற்றுவதற்காக பொலிஸ் திணைக்களத்துக்கு சுமார் 1,500 பணியாளர்கள் தற்காலிக அடிப்படையில் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர்.
அதன்படி நாடு முழுவதுமுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு நான்கு பணியாளர்கள், ஏ-1 கிரேடு பொலிஸ் நிலையத்துக்கு மூன்று பணியாளர்கள், ஏ-2 கிரேடு பொலிஸ் நிலையத்துக்கு மூன்று பணியாளர்கள், மற்ற பொலிஸ் நிலையங்களுக்கு இரண்டு பணியாளர்கள் என தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பணியமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு தினசரி ஊதியத்தை வழங்கும்
000
Related posts:
ரயில் பயணிகளுக்கு இலத்திரனில் அட்டை அறிமுகம் - போக்குவரத்து, மின்சக்தி, சக்திவலு அமைச்சர்!
கூட்டமைப்பினரின் சொந்த வாழ்வுக்காக வாக்களிக்க முல்லை மக்கள் இனியும் தாயாராக இல்லை – ஈ.பி.டி.பியின் வ...
மக்கள் பிரச்சனைகள் தொடர்பில் வெளிப்படைத் தன்மையுடன் விவாதிக்கப்படும் - வடக்கின் ஆளுநர் ஜீவன் தியாகர...
|
|
|


