காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள எந்தவொரு ஊழியர்கயும் பணிக்கு அழைக்க வேண்டாம் – தொழில் நிறுவனங்களுக்கு சுகாதார பிரிவின் கடுமையான எச்சரிக்கை!

Thursday, July 1st, 2021

காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள எந்தவொரு ஊழியர்கயும் பணிக்கு அழைக்க வேண்டாம் என பிரதி சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் அனைத்து நிறுவனங்களின் பிரதானிகளிடமும் விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வாறான நோயாளிகளை பணிக்கு அழைப்பதனால் முழு நிறுவனத்திற்கும் கொவிட் ஆபத்து ஏற்பட கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஊழியர்கள் தொடர்பில் தீவிரமான அவதானம் செலுத்துமாறு அவர் எச்ச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, குளிரூட்டி பொருத்தப்பட்டுள்ள இடங்களில் அல்லது முழுமையாக அடைக்கப்பட்டுள்ள இடங்களில் முகக் கவசமின்றி ஒன்றாக சாப்பிடுவது, கதைப்பது அல்லது தேனீர் குடிப்பது போன்ற விடயங்களை தவிர்க்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் பலர் ஒன்றாக சேர்ந்து உணவு உட்கொள்வதனால் கோவிட் வேகமாக பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக சுகாதார பிரிவின் பிரதானிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறப்பிடத்தக்கது.

Related posts: