தேர்தல் செலவீனங்களைக் குறைக்க விசேட சட்டமூலம்!

Saturday, June 30th, 2018

தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது ஏற்படுகின்ற செலவீனங்களைக் குறைத்துக் கொள்வது தொடர்பிலான சட்டமூலமொன்றை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சட்ட வல்லுநர் தீபானி குமார ஜீவ தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது ஏற்படுகின்ற செலவினங்களை குறைத்துக் கொள்வது தொடர்பிலான சட்டமூலமொன்றைத் தயாரிக்கும் பணிகள் சட்டவாக்க திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆரம்பகட்ட சட்ட வரைபுகள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினூடாக வழங்கப்பட்டுள்ளதுடன்;, இந்த சட்டமூலத்தை தயாரிப்பதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது.

அரசியல் கட்சிகள், தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்கி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தேர்தல் செயற்பாடுகளுக்கான செலவினங்களை வரையறுப்பதற்காகவே மேற்படி சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

ஊரடங்கு நடைமுறை - நாட்டில் நாளாந்தம் 15 பில்லியன் நட்டம் - நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்...
சுகாதார தொழிற்சங்கங்கள் பணி பகிஷ்கரிப்புக்கு விரைவில் தீர்வு - சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ...
இணைய வழி கடவுச்சீட்டு முறைமையில் 3 ஆயிரத்து 265 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் - குடிவரவு மற்றும் குடியக...