யாழ். மாவட்டத்தில் ஊரடங்கை தளர்த்துவது குறித்து மீளாய்வு செய்ய வேண்டும் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர்!

Wednesday, April 15th, 2020

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது குறித்து மீளாய்வு செய்ய வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் வைத்தியர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மீள் ஆரம்பிக்கும் திகதியையும் மீளாய்வு செய்தல் வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 12 நாட்களின் பின்னர் நேற்று  8 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிகளவிலான பரிசோதனைகளை மேற்கொள்ளாமலும், பரிசோதனை செய்து தொற்றில்லாதவர்களை மீள பரிசோதனைக்கு உட்படுத்தாதமையே இதற்கு காரணமாகும் என்றும் தெரிவித்த அவர் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்த வேண்டும் என்றும்  அவர்களுக்கும் கொரோனா நோய் இருக்கின்றதா? என்பதை கண்டுபிடிக்க பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் தெரிவித்த அவர் தேவாலயத்தில் ஆராதனை நடத்திய போதகருடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய அனைவருக்கும் மீளவும் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் உலக சுகாதார அமைப்பு கூறியபடி மூன்று தடவைகளாவது பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் வைத்தியர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

Related posts: