நீர்வெறுப்பு நோய் அதிகரிக்கும் அபாயம் – அரச கால்நடை வைத்தியர்கள் சங்கம் எச்சரிக்கை!

Saturday, February 9th, 2019

நாட்டில் நீர்வெறுப்பு நோய் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மே மாதத்திலிருந்து கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினால் மிகவும் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருகின்ற நீர்வெறுப்பு நோயை(விசர் நாய்க்கடி) தடை செய்யும் நிகழ்ச்சித் திட்டத்தை மீளவும் சுகாதார அமைச்சுக்கு உள்ளீர்ப்பதற்காக சுகாதார அமைச்சரவை பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சித் திட்டமானது கடந்த 65 வருடங்களாக சுகாதார அமைச்சினால் செயற்படுத்தப்பட்டு தோல்வியடைந்திருந்தது. எனவே இதனை கருத்தில்கொண்டு ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி முதல் துறைசார் நிபுணர்களைக்கொண்டு இயங்கும் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்திடம் வழங்கப்பட்டது. இக்குறுகிய காலப்பகுதியில் 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய்களுக்கான கருத்தடை சிகிச்சைகளும் 2 ஆயிரத்து 600 இற்கும் மேற்பட்ட விழிப்புணர்வு கருத்தரங்குகளும் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டன.

அத்துடன் கடந்த வருடத்தில் விசர் நாய்க்கடிக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது முன்னைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் கணிசமாக குறைந்துள்ளதுடன் கடந்த காலங்களில் இலங்கையில் இருந்து சுin னநசிநளவ எனும் நோய் முற்றுமுழுதாக கால்நடை வைத்தியர்களினால் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: