தேர்தல் சீர்திருத்தத்திற்கான இறுதி முடிவு எதிர்வரும் 15இல் வெளிவரும்!
Tuesday, September 6th, 2016
புதிய தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான இறுதி முடிவு எதிர்வரும் 15ஆம் திகதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,வாக்காளர்கள் தங்களது பெயர் விபரங்கள் அடங்கியுள்ளதா என்பதை http://eservices.elections.gov.lk/myVoterRegistrationDraft.aspx என்ற இணையத்தளத்தின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் தேர்தல் ஆணையாளர்அறிவித்தார்.
குறித்த இணையத்தள முகவரியில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் போன்ற மூன்று மொழிகளிலும் தங்களது விபரங்களைப் பார்வையிடக்கூடியவாறு அமைந்துள்ளது.

Related posts:
நான் பொறுப்பல்ல - தேர்தல் ஆணையாளர்!
மீண்டும் அலுகோசு பதவிக்கு விண்ணப்பம் கோரல்!
3.4 பில்லியன் ரூபா பெறுமதியான தமிழக அரசின் மனிதாபிமான உதவிகள் இலங்கை அரசாங்கத்திடம் இன்று கையளிப்பு!
|
|
|


