தேர்தல் ஆணைக்குழு உட்பட பல சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

Tuesday, January 24th, 2023

தேர்தல் ஆணைக்குழு உட்பட பல சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

21 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி நிறுவப்பட்ட அரசியலமைப்புச் சபையினால் நியமனங்கள் செய்யப்படவுள்ளன.

அரசியலமைப்பு பேரவை நாளை (25) காலை 09.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளதாக பாராளுமன்ற பிரதி பொது செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட 10 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப் பேரவைக்கு இதுவரை 09 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரதான எதிர்க்கட்சி அல்லாத ஏனைய எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பில், நாளையதினம் கூடவுள்ள அரசியலமைப்பு சபையில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

பல ஆணைக்குழுக்களுக்கான தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான ஜனாதிபதியின் பரிந்துரைகளை அரசியலமைப்பு சபை அங்கீகரிக்க வேண்டும்.

இதன்படி, தேர்தல், எல்லை நிர்ணயம், பொதுச் சேவை, பொலிஸ், கணக்காய்வு சேவைகள், நிதி, கொள்வனவு, மனித உரிமைகள், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

ஒக்டோபரில் எல்லை நிர்ணயம் பூர்த்தி:  ஜனவரியில் உள்ளூராட்சித் தேர்தல் - அமைச்சர் பைசர் முஸ்தபா !
பொதுமக்களின் ஆதரவே பயணக் கட்டுப்பாட்டு நடைமுறையை தளர்த்தும் தீர்மானத்தை நிர்ணயிக்கும் - பொலிஸ் ஊடக ...
இலங்கை மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவத...