பொருளாதாரத் துறையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை!

Thursday, December 2nd, 2021

பொருளாதாரத் துறையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்றையதினம் புதுடில்லியில் நடைபெற்றது. இதன்போதே குறித்த விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா பல்வேறு துறைகளில் இலங்கைக்கு வழங்கியிருக்கும் ஒத்துழைப்புப் தொடர்பிலும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு இதன்போது நன்றி தெரிவித்திருந்தார்..

அத்துடன் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்புகளில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் முதலீடு மற்றும் மேம்படுத்தப்பட்ட சுற்றுலா பரிமாற்றங்கள் மூலம் இந்தியாவிடமிருந்து முக்கியமான பொருளாதார உதவிகளை அவர் பெறுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிதியமமைச்சராக பதவியேற்றதன் பின்னர் பசில் ராஜபக்ஷ மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பின்போது நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட உள்ளிட்ட அதிகாரிகளும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: