தேர்தல் ஆணைக்குழுவிற்கு நிதிச்சுதந்திரம் அவசியமாகும் – பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவிப்பு!

Tuesday, February 14th, 2023

வரலாற்றில் முதல் தடவையாக தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அரசாங்கம் தடையாக செயற்பட்டு வருகின்றது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளன.

வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பொருளாதாரத்தினை சுட்டிக்காட்டி அதற்கான நிதியினை வழங்க மறுப்பதன் வாயிலாக அரசாங்கம் தேர்தலுக்கு தடையாக செயற்படுகின்றது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது எதிர்காலத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் ஆகியவற்றிலும் பிரதிபலிப்பதற்கான அபாயம் காணப்படுகின்றது.

ஜனாநாயகத்தை நிலைநிறுத்த அரசாங்கம் தன்னிச்சையாக முன்வந்து தேர்தல் ஆணைக்குழுவிற்கு நிதிச் சுதந்திரத்தை வழங்கி தேர்தலை நடத்த வேண்டும்.

அவ்வாறில்லையாயின் எதிர்கால சந்ததியினரை இந்த நடவடிக்கை வெகுவாக பாதிக்கும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: