உலக பழங்குடிகள் தின நிகழ்வுகள் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

Sunday, August 9th, 2020

இந்நிலையில் இலங்கையில் தற்போது தேர்தல் இடம்பெற்றதன் காரணமாக உலக பழங்குடிகள் தினத்தை எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக பழங்குடி தலைவர் ஊருவரிகே வன்னிலெத்தன் தெரிவித்துள்ளார்.

குறித்த தினத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக செயற்படுமாறும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே உலக பழங்குடிகள் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஒகஸ்ட் மாதம் 9ஆம் திகதி அனுசரிக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் 1994 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முன்மொழியப்பட்டு , 2007 செப்டம்பர் 13 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தொல்பழங்குடிகளான குறிஞ்சி நிலத்தின் குன்றகுறவர்களின் உரிமைகளை ஊக்குவிக்கவும், அவ்வுரிமைகளைப் பாதுகாக்கவும் இத் தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்நிகழ்வானது அப்பழங்குடி குறவர் மக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற உலக பிரச்சினைகளின் எடுக்கும் நல்லெண்ண முடிவுகளுக்கு அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.

Related posts: