தேர்தலை சம்பிரதாயமாக பார்க்காமல் அரசை தீர்மானிக்கும் சக்தியாக உணர வேண்டும் – வேட்பாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன்!

Saturday, June 27th, 2020

தேர்தலை ஒரு சம்பிரதாயமாக பார்க்காமல், தங்களால் தங்களுக்காக ஆழப்படும் அரசை தீர்மானிக்கும் சக்தியே தேர்தல் என்பதை மக்களாகிய நாம் உணர வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்ப்பாண உதவி நிர்வாக செயலாளரும், விருப்பு இலக்கம் ஒன்றில் போட்டியிடும் வேட்பாளருமான ஐயாத்துரை  ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் வடமராட்சி அல்வாய் வடக்கு மாவிலங்கை கிராமத்தில்  இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

எதிர்வரும் தேர்தலை இப்பிரதேச மக்கள் சரியான வகையில் தெளிவான தெரிவை மேற்கொள்ளும் போது பின்தங்கியுள்ள எமது பிரதேசத்தை வளப்படுத்த முடியும். அதற்கு அதிகாரம் தேவை, அதிகாரம் மக்களால் ஜனநாயக வழிமுறையில் தரப்பட வேண்டும்.

அந்தவகையில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மக்களிடமிருந்து அதிகமான பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அரசியலுரிமைப் பிரச்சினை, அபிவிருத்தி, அன்றாடப் பிரச்சினையை தீர்ப்பதற்காக மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற இலக்கு நோக்கிய கொள்கையுடன் தனது அரசியல் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது.

இந்த தேர்தலில் ஏமாற்று தலைமைகளையும் இனவாத உணர்ச்சி பேச்சுக்களுடன் உலாவும் டீலர்களையும் ஒரம் கட்டி நம்முடைய ஒருவாக்குக் கூட நல்ல வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க உதவுமென்ற மனப்போக்கு என்டைக்கு உதிர்கிறதோ அப்போதுதான் எமது எதிர்பார்புக்கள் நிறைவேறும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: