தேர்தலுக்கு 70 பிரதான கட்சிகள் தகுதி பெற்றுள்ளன – மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்!

Tuesday, October 10th, 2017

ஜனவரி மாதம் நடத்த உத்தேசித்துள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கு 70 பிரதான கட்சிகள் தயாராகி உள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முஹம்மத் தெரிவித்துள்ளார்.

பிரதான கட்சிகளுக்கு தெளிவுபடுத்தும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதிகளுக்கு ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு எதிர்காலத்தில் தெளிவுபடுத்தப்படும். மாவட்ட தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் பிரதித் தேர்தல் ஆணையாளர்களுக்கு விளக்கமளிக்கும் 3 நாள் செயலமர்வும் இடம்பெற்றுள்ளது.

வாக்களிப்பு நிலையங்கள் தொடர்பான விபரங்களை கிராம உத்தியோகத்தர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். தேர்தல் நடவடிக்கைகளுக்க 1 இலட்சத்து 20 ஆயிரம் உத்தியோகத்தர்கள் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தேவையான பயிற்சி டிசம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

டிசம்பர் மாதம் நடைபெறும் சாதாரண தர பரீட்சை கடமைகளில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு இம்மாதம் 20ம் திகதி முதல் தேவையான பயிற்சி வழங்கப்படும். 337 உள்ளுராட்சி மன்றங்களுக்கு 8 ஆயிரம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. வாக்களிப்பு மத்திய நிலையத்திலேயே வாக்குகள் எண்ணப்படும்.

 2017ம் ஆண்டு வாக்காளர் இடாப்பு இதற்காகப் பயன்படுத்தப்படும். வாக்காளர் இடாப்பு இம் மாதம் 12ம் திகதி நிறைவேற்றப்படும். ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக மேலும் பல சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அவற்றை விரைவில் முன்னெடுக்க உள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: