தேசிய பாடசாலைகளுக்கு 2,500 புதிய ஆசிரியர் நியமனங்களை ஜூலை 3 ஆம் திகதி வழங்குவதற்கு ஏற்பாடு – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Friday, June 14th, 2024

இலங்கையிலுள்ள தேசிய பாடசாலைகளுக்கு 2,500 புதிய ஆசிரியர் நியமனங்களை ஜூலை 3ஆம் திகதி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மாகாண ஆளுநர்களுடன் நேற்று (12) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அதன்படி இரசாயனவியல், பௌதீகவியல், உயிரியல், கணிதம், தொழில்நுட்பம், சர்வதேச மொழிகள் ஆகிய பாடங்களுக்கு 2,100 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

2021ஆம் ஆண்டு நடைபெற்ற ஆங்கில மொழிமூல உயர் டிப்ளோமா பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் 500 ஆசிரியர்களை நியமிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: