இதுவரை 15 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக உதவித் தேர்தல் ஆணையாளர் கி.அமலராஜ் தெரிவிப்பு!

Wednesday, June 17th, 2020

யாழ்ப்பாணத்தில் தேர்தல் அறிவிக்கப்படத்திலிருந்து இன்றுவரை  ஒரு தேர்தல் வன்முறை சம்பவம் உட்பட 15 தேர்தல் விதிமுறை மீறல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் கி.அமலராஜ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 17.06.2020 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

யாழ்ப்பாணத்தில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்ட்தான் பின்னர் இன்றுவரை 15 தேர்தல் விதி மீறல் முறைப்பாடுகள் கிடைக்கப்பயிறுள்ளன. அவற்றில் பெரும்பாலான முறைப்பாடுகள் தேர்தல் சட்ட விதிகளை மீறியதற்கான முறைப்பாடுகள் ஆகும். எனினும் ஒரேயொரு தேர்தல் வன்முறை சம்பவம் பதிவாகியுள்ளது.

அது அண்மையில் தென்மராடசியில் இடம்பெற்ற தனியார் ஊடக நிறுவன தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளது. இதனை விட பாரிய சம்பவங்கள் எவையும் இதுவரை பதிவாகவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: