தேசிய கல்வியியற் கல்லூரிகளில் தேசிய டிப்ளோமா பாட நெறியை கற்பதற்கு விண்ணப்பம் கோரல்!

Friday, September 18th, 2020

தேசிய கல்வியியற் கல்லூரிகளில் தேசிய டிப்ளோமா பாட நெறியை கற்பதற்கான ஆட்சேர்க்கும் பொருட்டு தேவையான கல்வித் தகைமைகளையும் தகவு திறன்களையும் உடைய விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க போதிய தகைமைகளும் தகவுதிறன்களும் இருந்தும் பொருத்தமாக விண்ணப்பிக்காமையால் கடந்த காலங்களில் சில மாணவர்கள் கல்விக் கல்லூரிகளுக்கான அனுமதி வாய்ப்பை இழந்துள்ளனர்.

மேற்படி விடயந் தொடர்பாக வர்த்தமானி அறிவித்தலை முற்றாக வாசித்து பொருத்தமான வழிகாட்டலுடன் விண்ணப்பிக்குமாறு விண்ணப்பதாரிகள் வேண்டப்படுகின்றனர்.

2018 ஆம் ஆண்டில் க.பொ.த (உயர்தர) பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு மாத்திரமே இது செல்லுபடியாகும். இம்முறை, விண்ணப்பங்கள் ONLINE ஊடாக அனுப்பப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

ஏனெனில், விண்ணப்பதாரியொருவர் ONLINE ஊடாக ஒருமுறை விண்ணப்பித்த பின் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது. மேலும் விண்ணபதாரிகள் பின்வரும் விடயங்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

2018 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட க.பொ.த.(உயர்தர) பரீட்சையில் பிரதான மூன்று பாடங்களிலும் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். அத்துடன் விண்ணப்பங்கள் யாவும் 2020-.09.-25 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டல் படிமுறை www.moe.gov.lk STUDENTS’ TAB Online Admission Ncoe Admission-2020 விண்ணப்பதாரர் 2020-.01-.01 ஆம் திகதி 25 வயதிற்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரர்கள் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தமிழ்மொழி மற்றும் கணிதம் உட்பட ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருப்பது முக்கியமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: