தேசிய அடையாள அட்டை விநியோகம் ஆரம்பம்!
Tuesday, March 5th, 2019
இந்த ஆண்டு நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை அனுப்புமாறு, பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வியானி குணதிலக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஆட்பதிவுத் திணைக்களத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள இடங்களில் அடையாள அட்டைக்கான நிழற்படங்களை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
கோர விபத்து – இத்தாவில் பகுதியில் இருவர் பலி!
யாழ்ப்பாணத்தில் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது சுகாதார நடைமுறைகள் - வடக்கு மாகாண சுகாதார சேவை...
6 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம் - பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு!
|
|
|


