தெற்கை அச்சுறுத்திய வைரஸ் கட்டுப்பாட்டில்!
Tuesday, June 12th, 2018
தென் மாகாணத்தில் பரவிய வைரஸ் காய்ச்சல் 75 சதவீதம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.விஜயசூரிய தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டம் சிறப்பாக அமுலாகியது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பரவிய வைரஸ் காய்ச்சலும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாகவும் டொக்டர் விஜயசூரிய குறிப்பிட்டார்.
பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்பிவைத்து இயல்பு வாழ்க்கையில் ஈடுபடக்கூடிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. எனவே, வைரஸ் நோய் குறித்து அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என்றும் தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறினார்.
Related posts:
ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழு அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம்!
இரண்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டவர்கள் மாத்திரமே, வியாபார நிலையங்கள், சந்தைகளில் கடமையாற்ற முடியும் – ...
இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது 340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவி காலம்!
|
|
|


