மரபுரிமைகள் பாதுகாக்கப்படும் – கல்வி அமைச்சர்

Friday, June 9th, 2017

நாட்டின் மரபுரிமைகள் பாதுகாக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றின்மூலம்  தெரிவித்துள்ளார்.

தொல்பொருள் பெறுமதிமிக்க எந்தவொரு காணியும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட மாட்டாது என்று தெரிவித்த அமைச்சர் , கடந்த ஆட்சிக் காலப்பகுதியில் தொல்பொருள் விஞ்ஞானப் பாதுகாப்பு சந்தேகத்திற்குரிய நிலையில் காணப்பட்டது. அந்த ஆட்சிக் காலப்பகுதியில் மரபுரிமை பகுதிகளில் ஹோட்டல்கள், சட்டவிரோத கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. சட்டவிரோத ரீதியில் குடியிருப்புகளும் மேற்கொள்ளப்பட்டன. தொல்பொருள்கள் அழிக்கப்பட்டன என்றும் சுட்டிக்காட்டினார்.

தொல்பொருள் பெறுமதிமிக்க எந்தவொரு காணியும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். முன்னாள் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் திசாநாயக்கவை பதவியிலிருந்து நீக்க அமைச்சரவை இணக்கப்பாட்டுடனேயே தீரமானம் மேற்கொள்ளப்பட்டது.

இவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள தொல்பொருள்  நிலையங்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தொல்பொருள் திணைக்களத்தை புனரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர கூறினார்.

Related posts: