தென்னங்கன்று நடுங்கள் ஆனால் பாதுகாக்கக் கூடாது –  சுமந்திரன்!

Wednesday, May 25th, 2016

கடலரிப்பைத் தடுக்க தென்னங்கன்றுகளை நடுங்கள் ஆனால் அதற்கு வேலி அடைக்கக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் வடமராட்சி கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவருமான ஆபிரகாம் சுமந்திரன் வியப்பான உத்தரவொன்றைப் பிறப்பித்தார்

வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று முன்தினம் (2016.05.23) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் 3.10 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது வடமராட்சி கிழக்கில் கரையோரங்களில் கடலரிப்பைத் தடுக்க வேண்டுமென வத்திராயன் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினர் கோரிக்கையை முன்வைத்து, கடலரிப்பைத் தடுக்க கடந்த காலங்களில் தென்னை மரங்கள் பாதுகாப்பாக இருந்தன ஆனாலும் சுனாமி அனாத்தத்தின் பின்னர் அவை அழிந்து விட்டன.

தற்போது கடலரிப்பால் மண் திட்டுக்கள் அள்ளிச் செல்லப்படுகின்றன எனவே இதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்தனர். இதன்போது பிரதேச செயலர் தென்னங்கன்றுகளை நடலாம் எனக்கூறினார். அதன்போது வத்திராயன் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க உறுப்பினர் திரு அண்ணாமலை அவர்கள் அத்தென்னங்கன்று வளர பாதுகாப்பு வேலி அடைக்க வேண்டுமெனக் கூறினார். இதன்போதே குறுக்கிட்ட சுமந்திரன் அவர்கள் தென்னம் நாற்றுக்களை நடுங்கள் ஆனால் அதற்கு வேலி அடைக்கக்கூடாது என உத்தரவிட்டு ஒலிவாங்கியை நிறுத்திக் கொண்டார்.

இதேவேளை வடமராட்சி கிழக்கில் தனியார் நிலங்கள் உட்பட 800 ஏக்கர் நிலம் படையினர் வசம் உள்ளது. இதுபற்றி கூட்டத்தில் எதுவும் பேசப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்தனர். நல்லாட்சி எனக்கூறப்படும் அரசில் கூட்டமைப்பினர் அங்கம் வகிப்பதால் படையினர் வசமுள்ள நிலங்களை மீட்பது பற்றி எதுவும் பேசப்படாமல் அமுக்கி வாசிக்கப்படுகிறது.

கடந்த அரசாங்கத்தில் படையினரினர் நிலைகொணடிருந்த நிலங்களை விடுவிப்போம் என சந்தி சந்தியாகக் கவனயீர்ப்புப் போராட்டம் என்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் வாய் பிளந்து கதறிய கூட்டமைப்பினர் இப்போது ஏன் மௌனம் சாதிப்பது ஏன் என கூடியிருந்த அதிகாரிகள் பேசிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: