சமூக வலைத்தளங்களில் இனவாதம் பரப்பினால் கடும் நடவடிக்கை!

Monday, June 5th, 2017

சமூக வலைத்தளங்கள் மூலம் இனவாதத்தை தூண்டும் தனிநபர்கள் அல்லது குழுக்களுக்கு எதிரா கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இனவாத சம்பவங்கள் அல்லது மோதல்கள் இடம்பெற்றால் அந்தந்த பிராாந்தியங்களுக்கு உரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளே பொறுப்பு கூற வேண்டும் என பொலிஸார் கூறியுள்ளனர்.

இனவாத சம்பவங்கள் இடம்பெறுவதை தவிர்ப்பதற்கு மிகவும் பொறுப்புடன் பணியாற்றுமாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், பிராந்தியத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவிக்கும் வகையில் சுற்றறிக்கை ஒன்றையும் பொலிஸ் மா அதிபர் அனுப்பிவைத்துள்ளார்.வெவ்வேறு மதங்களை பின்பற்றுவோர் மத்தியில் சமூக வலைத்தங்கள் ஊடாக வெறுப்புணர்வை தூண்டும் மற்றும் பரப்பும் தனிநபர்களையும் குழுக்களையும் அடையாளம் கண்டுள்ளதாக பூஜித் ஜயசுந்திர கூறியுள்ளார்.

குறித்த நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கையை எடுப்பதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்திர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: