தூதுரகத்தை மூடும் முடிவை நைஜீரியா மறுபரிசீலனை செய்யும் – ஜனாதிபதி புஹாரி !

Wednesday, September 4th, 2019


இலங்கையுடனான தமது உறவை கருத்திற்கொண்டு கொழும்பில் உள்ள தமது தூதரகத்தை மூடுவதை நைஜீரியா மறுபரிசீலனை செய்யும் என அந்நாட்டு ஜனாதிபதி முஹம்மது புஹாரி தெரிவித்துள்ளார்.

2017ம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட நிதி சவால்களையடுத்து சில நைஜீரிய தூதரகங்களை மூடுவதாக அறிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். நைஜீரியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக கடைமையாற்றிய தம்பிராஜா ரவீந்திரனின் பணிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், தலைநகர் அபுஜாவில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “உயர்ஸ்தானிகரின் கோரிக்கைக்கு அமைய, இது இலங்கையை பாதிக்கும் விடயமாக இருந்தால், தமது நிர்வாகம் மாற்று முடிவை எடுக்கும் என உறுதியளித்தார். அத்துடன், பணி காலம் முடிந்து செல்லும் உயர்ஸ்தானிகரின் எதிர்கால முயற்சிகள் வெற்றிபெறவேண்டும் எனவும் நைஜீரியா ஜனாதிபதி முஹம்மது புஹாரி மேலும் தெரிவித்திருந்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட தம்பிராஜா ரவீந்திரனின், “தனது 30 ஆண்டு கால இராஜதந்திர சேவையில் நான்கு ஆண்டுகள் நைஜீரியாவில் செலவிட்டுள்ளதாக கூறியுள்ளார். அத்துடன், நைஜீரியாவில் இருந்த காலம் பல வழிகளில் குறிப்பிடத்தக்கதாக இருந்துள்ளதுடன், நைஜீரிய மக்கள் வழங்கிய ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு, மருத்துவம், சுற்றுலா மற்றும் உயர் கல்வி போன்ற துறைகளில் நைஜீரியா தனது நாட்டிற்கு வழங்க நிறைய இருக்கிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: